தீபாவளி
November 01, 2013
வெடிச்சத்தம் கேட்டவுடன் வெண்ணிலா ஒளிந்துகொள்ள தேடிச்சென்ற ராக்கெட்டுக்கு நிலவேதும் கிடைக்கவில்லை, நட்சத்திரங்களைத் தூக்கிப்போட ஓடிவந்து ஒட்டிக்கொண்டன புன்னகையாய் கன்னத்தில்! இரவெல்லாம் இருளிழந்து இதயங்கள் துடிமறந்து உறவுகள் உடனிருந்து சிறக்கட்டும் தீபத்திருநாள்!